புதுதில்லி: பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவது நிகழும் பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்காக பல்வேறு வழிமுறைகளும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 567678 மற்றும் 56161 ஆகிய இரு எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பயனாளர்கள். தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
அதற்கு முதலில் UIDAI என்று டைப் செய்து இடைவெளி விட்டு முதலில் முதலில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்ட எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு மத்திய அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"எங்களை வைத்துதான் கூடுதல் சீட்! ஜெயக்குமார் TVK வரலாம்" செங்கோட்டையன் பேட்டி

5-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

பீலேவை விட மெஸ்ஸி சிறந்தவர்..! டிரம்ப் புகழாரம்!

ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! அமெரிக்காவின் மிரட்டல் எவ்வளவு காலம் தொடரும்?
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

