திமாபூரில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

நாகாலாந்த் மாநிலம் திமாபூர் புறநகர் பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர்
திமாபூரில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

திமாபூர்: நாகாலாந்த் மாநிலம் திமாபூர் புறநகர் பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மிகவும் பழமையான அந்த மேம்பாலத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. கன ரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், 100 கிராமங்களை இணைக்கும் பாலம் என்பதால் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், பாலத்தின் அடியில் ஓடிய வெள்ள நீர் காரணமாக அந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக நகரின் துணை ஆணையர் கேசன்யூ யோசி தெரிவித்துள்ளார். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 வேன், 3 மினி லாரிகள் மற்றும் ஒரு ஆட்டோ பாலத்தின் அடியில் சிக்கி மோசமாக தேசம் அடைந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குழுவினர், விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருவதாகவும் திமாபூர் நகர காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த துயர விபத்துக்கு நீண்ட காலமாக பொது அபாயமாக அறிவிக்கப்பட்ட பாலத்தை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளே கவனம் செலுத்தாததே காரணம். பாலத்தின் அபாயம் குறிந்து அறிந்து சரியான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், எதிர்காலத்தில் இது போன்ற துயர மற்றும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் தவிர்க்கும் பொருட்டு நாகாலாந்து மற்றும் பொதுப்பணித்துறை அல்லது  சாலை மற்றும் பாலங்கள் துறை பணியாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ ரிக்சா, 3 மினி லாரிகள் உள்பட 6 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் அவற்றை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திரிபுராவைச் சேர்ந்த பாக்செட் அலியின் மனைவி ஜகிதா அலி(23), அப்துல் மாலிக் மனைவி ரோகிதா தேவி, சாஹில் அலி தயூப் அலி என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமாபுர் பாலம் இடிந்ததால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com