பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

'மோடி: சமூக சேவையின் முன்னோடி'- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்திய நாட்டில் சமூக சேவை செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னோடியாக விளங்குவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

News image
Updated On :12 ஜூலை 2017, 2:28 pm

DIN

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியப் பிரதமர் மோடி குறித்து 'எ லெஜண்ட் இன் தி மேக்கிங்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நம் நாட்டில் எப்போதுமே ஒரு நடைமுறை உள்ளது. அதாவது ஒரு செயலை செய்வதற்காக நாம் சரியான நபர் வரவேண்டும் என காத்திருப்பது. அதிர்ஷ்டவசமாக தற்போது அந்த செயல் நடந்துவிட்டது. இந்திய நாட்டிற்காக சேவை செய்வதற்காகவே நம்முடைய பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதில் மோடி, இந்திய நாட்டில் முன்னோடியாக திகழ்கிறார். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பது போன்று மக்களுக்காக உழைப்பவருக்கு நம்நாடு எப்போதும் தலைவணங்கும். அதையே மோடி தற்போது செய்து வருகிறார். நாட்டிற்கு நல்லது என்றால் அது நம் எல்லோருக்கும் நல்லதுதான். 

ஆனால், இதில் மோடிக்கு ஒரு ஆபத்து உள்ளது. அதை அவர் உணர வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னைகளையும் மோடி, தன் தலையில் போட்டுக்கொள்கிறார். இருந்தாலும், தனி நபர்களின் சாம்ராஜ்யம் (காங்கிரஸ் ஆட்சி) முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.