இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வளாகத்துக்குள் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

DIN


உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வளாகத்துக்குள் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை வழக்கமான சோதனைப் பணிகள் நடந்தன. பாதுகாப்புப் படையினர், மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையின் போது, சட்டப்பேரவைக்குள், எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைக்குக் கீழே வெள்ளைநிற பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இது சக்திவாய்ந்த வெடிமருந்து என்பது தெரிய வந்துள்ளது.

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், கடந்த ஒரு வார காலமாக உத்தரப்பிரசேதம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று உத்தரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.