தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜவுளி மீதான வரிவிதிப்பை குறைக்க முடியாது: ஜேட்லி திட்டவட்டம்

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்யவோ, குறைக்கவோ இயலாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூலை 2017, 8:41 pm

DIN

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்யவோ, குறைக்கவோ இயலாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி-க்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் ஜவுளி வியாபாரிகள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இத்தகைய கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி நடைமுறை கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஜவுளிக்கும், அனைத்து வகையான துணிகளுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் நிர்ணயித்திருந்த 5 சதவீத வரி நடைமுறைக்கு வந்தது.
ஆனால், இந்த புதிய வரி விதிப்பு முறையை ஏற்க முடியாது எனக் கூறி குஜராத்தின் சூரத், ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இந்தப் போராட்டம் எதிரொலிக்கிறது.
ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறும் வரை தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஆமதாபாத், சூரத் நகரங்களில் 50,000-க்கும் மேற்பட்ட துணிக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய நிதியமைச்சர் ஜேட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
சுதந்திர இந்தியாவில் ஜவுளி பொருள்கள் மீது எந்தவிதமான வரியும் இதுவரை விதிக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. கடந்த 2003-04-ஆம் ஆண்டில் அனைத்து ஜவுளி பொருள்களும் கலால் வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டன.
சொல்லப்போனால், தற்போது உள்ள வரி விகிதமும், ஜிஎஸ்டி-க்கு முந்தைய காலத்தில் இருந்த வரி விகிதமும் ஏறக்குறைய ஒன்றுதான். ஜவுளி மீதான 5 சதவீத வரியை ரத்து செய்தால் அதனால், பல்வேறு எதிர்விளைவுகள்தான் வர்த்தகர்களுக்கு ஏற்படும் என்று அதில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.