சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இஸ்ரோ முன்னாள் தலைவர் ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ்(85) மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

DIN

புதுதில்லி: இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ்(85) மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வசித்து வந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ்(85) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராவின் பங்களிப்பு மறக்க முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் அதம்பூர் என்ற கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு பிறந்தார் உடுப்பி ராமசந்திர ராவ் (85). காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் குறித்தும், விண்வெளி இயற்பியல், உயர் ஆற்றல் வானியல், விண்வெளி பயன்பாடுகள், செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய 350 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து இவரது வழிகாட்டுதலின் படி, 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஆப்பிள், ரோஹிணி, இன்சாட்-1, இன்சாட்-2 உள்பட பல செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் செயற்கைக்கோள் மைய இயக்குநராக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக பணியாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.