தில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள லோக் நாயக் பவனில் தீ விபத்து!
தில்லியில் நிதி த்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள லோக் நாயக் பவனில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


புதுதில்லி: தில்லியில் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள லோக் நாயக் பவனில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தில்லியின் கான் மார்க்கெட் பகுதிக்கு அருகே உள்ள ரபீந்த்ரா நகரில் லோக் நாயக் பவன் என்னும் கட்டிடம் அமைந்துள்ளது. இதில் மத்திய அரசின் நிதி, சிறுபான்மை நலத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது.
அந்த கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து இன்று மாலை திடீரென புகை வந்தது. அதைத் தொடர்ந்து தீ பற்றி எரியத் துவங்கியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் வெளியேறினர்.
தகவல் கேள்விப்பட்டு இரண்டு வாகனங்களில் 25 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...