பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மும்பையில் 4 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து ஒருவர் பலி; 40 பேர் காயம்: மீட்பு பணிகள் தீவிரம்

மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர்.

News image
Updated On :25 ஜூலை 2017, 9:22 am

DIN


மும்பையில் 4 மாடிக்கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்பையின் காட்கோபர் தாமோதர் பூங்கா, லால் பகதூர் சாஸ்திரி சாலை பகுதியில் உள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்று இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.

இந்த கட்டட இடிபாடுகளுக்குள் 40க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ஒன்பது பேர் சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.