/

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அமித் ஷா போட்டி

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:31 pm

DIN

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.
மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஒ பிரையன் ஆகிய 9 பேரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இவர்கள் 9 பேரும், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். இதையடுத்து, அந்த 9 இடங்களுக்கும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தில்லியில் பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு, பாஜக மூத்த தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிட இருக்கிறனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.