பிகார் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் நிதீஷ்: தேஜஸ்வி சாடல்
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலமாக பிகார் மக்களுக்கு நிதீஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் என்று மாநில முன்னாள் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் சாடினார்.


பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலமாக பிகார் மக்களுக்கு நிதீஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் என்று மாநில முன்னாள் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் சாடினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தேஜஸ்வி யாதவ் தனது துணை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தி வந்தார். இதற்கு தேஜஸ்வி யாதவ் உடன்பட மறுக்கவே, தமது முதல்வர் பதவியை நிதீஷ்குமார் புதன்கிழமை மாலை அதிரடியாக ராஜிநாமா செய்தார். இது பிகார் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கு ஆதரவளிக்க பாஜக முன்வந்தது. இதனால், மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் நிதீஷுக்கு மீண்டும் கிடைத்தது. இதனையடுத்து, பிகார் முதல்வராக நிதீஷ் குமார் வியாழக்கிழமை காலை மீண்டும் பதவியேற்றார். அதன் பின்னர், பிகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நிதீஷ் குமாரை ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றம் செல்வோம்: இந்தச் சூழ்நிலையில், பிகார் ஆளுநர் திரிபாதியை தேஜஸ்வி யாதவ் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிகார் சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ராஷ்ட்ரீய ஜனதா தளம். அப்படியிருக்கையில், மாநிலத்தில் ஆட்சியமைக்குமாறு ஐக்கிய ஜனதா தளத்தை ஆளுநர் எவ்வாறு அழைக்க முடியும்? எனவே, ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு நாங்கள் செல்லவுள்ளோம்.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணிக்குதான் பிகார் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், மக்கள் தீர்ப்பை மதிக்காமல் பாஜகவுடன் நிதீஷ் கூட்டணி அமைத்திருக்கிறார். இதன் மூலம் பிகார் மக்களுக்கு நிதீஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார். எனவே, நிதீஷ் குமாரால் இனி மக்களை சந்திக்கவே முடியாது.
நிதீஷ் குமாரின் இந்த துரோகத்துக்கு எதிராக பிகார் முழுவதும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என்றார் தேஜஸ்வி யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...