புதுதில்லி: விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இனிமேல் விமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது, அவர்களுடைய ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது என்றும், அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் பயணிகள் கையை ‘ஸ்கேன்’ செய்யும் பொழுது , கைரேகைகள் ஒப்பிடப்படும் என்றும், இதன்மூலம் எந்த விதமான பாஸ்போர்ட் மோசடிகளுக்கும் நடக்க இனி சாத்தியம் இல்லை என்றும் கடந்த மே மாதம் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் காங்கிரசினைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஆதார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர்.
அப்பொழுது மத்திய அரசு விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் குறித்துக் கேள்வி எழுந்த பொழுது , அப்படி எந்த ஒரு திட்டமும் கிடையாது என தெரிவிக்கப்பட்ட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


