டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தெலங்கானா உதயமானதன் 3ம் ஆண்டு தின நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் துணை முதல்வர்

தெலங்கானா மாநிலம் உதயமானதன் 3ம் ஆண்டு விழாவில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி திடீரென மயக்கமடைந்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

DIN


வாரங்கல்: தெலங்கானா மாநிலம் உதயமானதன் 3ம் ஆண்டு விழாவில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி திடீரென மயக்கமடைந்தார்.

தெலங்கானா காவல்துறை பேரணி மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவின் போது தெலங்கானா அரசின் வளர்ச்சி அறிக்கை வாசிக்கப்பட்டது. முன்னதாக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, உரையாற்றிய ஸ்ரீஹரி திடீரென மேடையில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக அவர் காருக்குள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்த மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நினைவு திரும்பியது. சிறிது நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் பிறகு தனது உரையை தொடர்ந்தார்.

அதிக வெப்பம் காரணமாகவே அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். பிறகு சகஜ நிலைக்குத் திரும்பிய ஸ்ரீஹரி, திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.