கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீதிபதிகளுக்கும் நுழைவுத் தேர்வு

கீழ் மன்ற நீதிபதிகளை நியமிக்கவும் நீட் போன்று நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி 4,452 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான

News image
Updated On :11 ஜூன் 2017, 8:44 am

DIN

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும் நீட் போன்று நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி 4,452 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடம் காலியாகவுள்ளது. 

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி சுமார் 60 ஆண்டுக்காலம் கடந்த நிலையில் நீதித்துறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர யோசனைகள் எழுந்துள்ளன. சட்ட அமைச்சகம் நீட் தேர்வை போன்றே ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை ஆட்சேர்ப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் அமைத்து நடத்த வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

ஏப்ரல் 8 நடைபெற்ற கூட்டத்தில் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை குறித்த விவாதங்கள் அரசாங்கத்திற்கும், நீதித்துறையினருக்கும் இடையே நடைபெற்றது. தற்போது உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாநில சேவை ஆணையங்கள் ஆகியவற்றில் நீதித்துறை அதிகாரிகளை நியமிக்கத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தேசிய அளவிலான நீதித்துறை சேவையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இதற்கான விவாதம் 1960 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்றது. பா.ஜ.க தலைமையிலான மத்திய பிரதேசம், அருணாசல் பிரதேசம் உட்பட்ட ஏழு மாநிலங்கள் அனைத்து இந்திய நீதித்துறை அமைப்பு உருவாவதை எதிர்கின்றனர். மாற்றொரு பா.ஜ.க ஆளும் மாநிலமான மகாராஷ்டிரா அனைத்து இந்திய நீதித்துறை சேவைக்கும் சட்ட அமைச்சகம் ஒன்று எந்த ஒரு சட்டத்திற்கும் விரோதமில்லாமல் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. 

நீதித்துறை அமைப்பின் ஒரு அறிக்கையின்படி பீகார், சத்திஸ்கர், மணிப்பூர், ஒடிசா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட திட்டத்தில் பெரும் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதம் நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை முடிந்தவுடன் இதைச் சார்ந்த விசாரணை மற்றும் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.