192 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கும் இந்திய அணி
44.3 ஓவரில் அனைத்து விக்கேட்களையும் இழந்து தென் ஆப்ரிக்கா 191 ரன்கள் எடுத்துள்ளது. 192 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்தியா களம் இறங்கவுள்ளது.


தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் அரை இறுதிக்கு முன்னேர போராடி வருகிறார்கள். இரு அணிகளும் புள்ளி பட்டியலில் சம நிலையில் இருப்பதால் இதில் வெற்றி பெரும் அணியே அரை இறுதிக்கு முன்னேற முடியும். டாஸ் வென்ற இந்திய அணி ஃபில்டிங்கை தேர்வு செய்த நிலையில் 42 ஓவர்கள் முடிவில் 184 ரன்களுக்கு 9 விக்கேட்டுகளை இழந்தது தென் ஆப்ரிக்கா.
16 ஓவர்கள் முடிவில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் தொடக்க ஆட்டக்காரரான ஆம்லாவை வீழ்த்தி முதல் விக்கேட்டை எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து 116 ரன்னிற்கு அடுத்த விக்கேட்டை எடுத்தார் ரவீந்தர் ஜடேஜா. டீ காக்கை அடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஆப் டி வில்லர்ஸ் கலம் இறங்கினார்.
16 ரன்களே எடுத்த நிலையில் ஆப் டி வில்லர்ஸ் ரன் அவுட் ஆகி ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். பின்னர் கலம் இறங்கிய டேவிட் மில்லர் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். எனவே 30 ஓவர்கள் முடிவில் 145/4 என்ற நிலையில் தென் ஆப்ரிக்கா அணி மிக நிதானமாக ஆடியது.

இவர்களைத் தொடர்ந்து டூ ப்லெஸ்ஸி 30 ரன்களுடன் பாண்டேவால் வீழ்த்தப்பட்டார். அடுத்தடுத்து களமிறங்கிய ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினர்.
இறுதியாக 44.3 ஓவரில் அனைத்து விக்கேட்களையும் இழந்து தென் ஆப்ரிக்கா 191 ரன்கள் எடுத்துள்ளது. 192 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்தியா களம் இறங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...