ரூ.36 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கொண்டுவந்த கொலம்பிய நாட்டவர் மும்பையில் கைது
மும்பையில் லேப்டாப் பையில் 36 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி வந்த வெளிநாட்டு நபரை, போதைப்பொருள் தடுப்புப்


மும்பை: மும்பையில் லேப்டாப் பையில் 36 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி வந்த வெளிநாட்டு நபரை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலம்பியாவில் இருந்து வந்த விமான பயணி ஒருவர், போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்புப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸார், பயணியின் லேப்டாப் பைகளில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 36 கோடி ரூபாய் இருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...