பெண்கள் தங்கள் முகநூல் ப்ரோபைல் படத்தினை பாதுகாத்திட எளிய வழி!

இந்தியாவில் பிரபல சமூக வலைத்தளமான முகநூலினை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் கணக்கின் சுயவிவர (ப்ரோபைல்) படத்தினை, தவறான நபர்களிடம் இருந்து பாதுகாக்க எளிய வழியொன்றினை... 
பெண்கள் தங்கள் முகநூல் ப்ரோபைல் படத்தினை பாதுகாத்திட எளிய வழி!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இந்தியாவில் பிரபல சமூக வலைத்தளமான முகநூலினை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் கணக்கின் சுயவிவர (ப்ரோபைல்) படத்தினை, தவறான நபர்களிடம் இருந்து பாதுகாக்க எளிய வழியொன்றினை முகநூல் அறிமுகம் செய்துள்ளது

இது தொடர்பாக முகநூல் இந்திய பிரிவின் தயாரிப்பு மேலாளர் ஆரத்தி சோமன் தனது வலைப்பூ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:

நாங்கள் பெரும்பாலான   பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில். தங்களது  புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பபட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக, பெரும்பாலான பெண்கள் தங்களுடைய புகைப்படத்தினை முகநூல் உட்பட இணைய வெளிகளில் பகிர்வதில்லை என்று தெரிந்தது  எனவே தற்பொழுது 'பேஸ்புக் கார்ட்' என்ற வசதியை எங்கள் நிறுவனம அறிமுகப்படுத்துகிறது 

எவ்வாறு இந்த வசதி செயல்படுகிறது?

நீங்கள் வழக்கமாக உங்கள் முகநூல் கணக்கினில் உள்ளே நுழைந்தவுடன் 'நியூஸ் பீட்' பகுதியில் முதலாவதாக 'உங்கள் ப்ரோபைல் படத்தினை பாதுகாக்க விரும்புகிறீர்களா? என்று ஒரு கேள்வி தோன்றும்.   அதற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தவுடன், ஒரு செய்தி பெட்டி ஒன்று திரையில் மிளிரும். அதில் பேஸ்புக் கார்ட் (facebok gurad) வசதியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகநூல் கணக்கினை கீழ்க்காணும் மூன்று வழிகளில் பாதுகாக்கலாம்' என்ற செய்தி தோன்றும்.

அவையாவன, இனி உங்கள் ப்ரோபைல் படத்தினை  யாரும் பதிவிறக்கம் செய்யவோ, பகிர்ந்து கொள்ளவோ அல்லது முகநூல் செய்தி பரிமாற்ற செயலியின் மூலம் செய்தியாகவோ அனுப்ப முடியாது

இரண்டாவதாக முகநூலில் உங்களுக்கு நண்பர்களாக இல்லாதவர்கள் உங்கள் படத்தினை முகநூலில் எங்குமே 'டேக்' செய்ய இயலாது.

இறுதியாக உங்களது ப்ரோபைல் படத்தினை சுற்றி நீல நிறத்தில் விளிம்பு ஒன்று தோன்றும். இதன்  மூலம் உங்களது ப்ரோபைல் படமானது ‘பேஸ்புக் கார்ட்’ வசதி மூலம் பாதுகாக்கப்படுவது அனைவருக்கும் தெரிய வரும்.  

இந்த செய்திகளுக்கு கீழே உள்ள 'அடுத்து' என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களது  புகைப்படம் பாதுகாக்கப்படும் உங்களுக்கு எப்பொழுது இது பிடிக்கவில்லையோ, அப்பொழுதே நீங்கள் உங்கள் ப்ரோபைல் படத்தினை கிளிக் செய்து,அமைப்புகளை பழையபடியே மாற்றிக் கொள்ளலாம்.  

இவ்வாறு ஆரத்தி சோமன் தனது வலைப்பூ பதிவில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com