பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விருத்தாசலம் அருகே பள்ளி வேன் மோதி மாணவி பலி: உறவினர்கள் சாலை மறியல்!

விருத்தாசலம் அருகே பள்ளி வேன் மோதியதில் 9-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள்

News image
Updated On :3 மார்ச் 2017, 5:03 am

சீனிவாசன்

அரசுக்குழி: விருத்தாசலம் அருகே பள்ளி வேன் மோதியதில் 9-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கென்னடி மகள் காவ்யா (எ) சிவரஞ்சனி(14). இவர் சி.கீரணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை அரசக்குழி பஸ் நிறுத்தத்தில் சாலையை கடக்க நின்றபோது தனியார் பள்ளி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

அருகில் நின்ற கல்லூரி மாணவிகளான நந்தினி, காமி 2 மாணவிகள் காயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த பாரி என்பவரின் மகள்கள். காயமடைந்த கல்லூரி மாணவிகள் 2 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.