ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் புலவாமா பகுதியில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடக்கும் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பலியானார்கள்.
ஜம்மு காஷ்மீரின் புலவாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று அதிகாலை முதல் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
அப்போது வீடு ஒன்றில் இருந்து பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் தொடங்கினர். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் முழுமையாக சுற்றி வளைத்துள்ளனர்.
தற்போது இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களில் ஒருவரும் பலியாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்னும் 4 முதல் 5 பேர் அந்த வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுவதால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும், தேடுதல் வேட்டையும் அங்கு நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


