போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

செலவினம் குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 6-வது இடம்!

சர்வதேச அளவில், செலவினம் குறைவாக உள்ள 10 நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

News image
Updated On :22 மார்ச் 2017, 4:54 am

தினமணி

புதுதில்லி: சர்வதேச அளவில், செலவினம் குறைவாக உள்ள 10 நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இதில், சென்னைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.

லண்டனை சேர்ந்த இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (இஐயு) என்ற ஆய்வு அமைப்பு தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பின் இந்தாண்டுக்கான  சர்வதேச அளவில், குறைந்த செலவினம் உள்ள 10 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், கஜகஸ்தான் தலைநகர் அல்மாட்டி நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு (3), சென்னை (6), மும்பை (7) மற்றும் டெல்லி (10) ஆகிய 4 நகரங்களில் குறைந்த செலவினம் உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கராச்சி 4-வது இடத்தில் உள்ளது. அல்ஜியர்ஸ் 5-வது இடத்திலும், கீவ் 8-வது இடத்திலும் இருக்கின்றன. பச்சாரெஸ்ட் 9-வது இடத்திலும் உள்ளது.

Story image

அதிக செலவினம் ஏற்படுத்தும் நகரமாக சிங்கப்பூர் உருவாகி இருக்கிறது. இந்த வரிசையில் ஹாங்காங் இரண்டாவது இடத்திலும், ஜுரிச் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அடுத்து டோக்கியோ (4), ஒசாகா (5), சியோல் (6) மற்றும் ஜெனீவா (7) ஆகிய நகரங்கள் உள்ளன. எட்டாவது இடத்தில் பாரிஸ் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் நியூயார்க்கும், பத்தாவது இடத்தில் கோபன்ஹேகன் நகரமும் உள்ளன.

கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் இந்திய நகரங்கள் பற்றி அண்மையில் ஓர் ஆய்வு நடைபெற்றது. தலா 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.60 கோடி) அல்லது அதற்கு அதிகமாக நிகர சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை முதலிடத்தில் உள்ளது. இங்கு 46,000 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 82 ஆயிரம் கோடி டாலராகும். இரண்டாவது இடத்தில் தில்லியும், மூன்றாவது இடத்தில் பெங்களூருவும் உள்ளன.

சர்வதேச அளவில் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.