மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாரில் லாலு பிரசாத் பங்கேற்ற நிகழ்ச்சி மேடை சரிந்ததால் பரபரப்பு

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :25 மார்ச் 2017, 9:11 am

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிகார் மாநிலம், மேற்கு பாட்னாவில் உள்ள திகாவில் நேற்று நடந்த சமயம் தொடர்பான நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.  அப்போது பாரம் தாங்காமல் மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் லாலு பிரசாத் உட்பட மேடையில் இருந்து அனைவரும் கீழே விழுந்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அடுத்து லாலு பிரசாத் உடனே வீடு திரும்பினர்.

வீடு திரும்பியதும் அவருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் லாலு பிரசாத்துக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.