டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆதார் அட்டையில் பதிவான தகவல்கள் கசிந்தது உண்மையே: ஒப்புக் கொண்டது மத்திய அரசு

ஆதார் அட்டை எண் மற்றும் அதில் இணைக்கப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் கசிந்தது உண்மையே என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:10 pm

முஹம்மது யூசுப் மிஸ்பாஹி


புது தில்லி: ஆதார் அட்டை எண் மற்றும் அதில் இணைக்கப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் கசிந்தது உண்மையே என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தனி நபர்களின் முக்கிய தகவல்கள் அடங்கிய ஆதார் தகவல்கள், இணையம் வாயிலாக கசிந்ததை மோடி தலைமையிலான மத்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஆதார் தகவல்கள் திருடப்படலாம் என்றும் அதன் பாதுகாப்பில் இன்னும் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்றும் வந்த ஏராளமான எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அரசு, தற்போது தகவல்கள் கசிந்திருப்பதை பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் மார்ச் 25ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில், ஆதார் தகவல்கள் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண், அந்த நபரின் பெயர், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், முகவரி போன்று தனி நபர்களின் விவரங்கள் கசிந்திருப்பது, ஆதார் சட்டம் 2016ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 5ம் தேதி மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆதார் தகவல்கள் கசிந்ததாக தவறான தகவல்கள் பரபரப்படுவதாகவும், எந்த ஆதார் தகவலும் கசியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் நிதித் துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஆதார் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பியதும், இணையத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் ஆதார் தகவல்கள் வெளியிடப்பட்டிருப்பது குறித்து அவரது மனைவி சாஷி தோனி சமூக தளத்தில் குற்றம்சாட்டியிருந்ததும், ஆதார் தகவல் திருட்டை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.