சென்னை: விரைவில் தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக இரு அணிகளாக அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என போட்டியிடுகின்றன. அதே போல திமுக, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக சரமாரியான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் அதிமுக அம்மா அணி (தினகரன்) ஆதரவாளர் கருணாமுர்த்தி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் பணம் கொடுக்கும் காட்சிகள் அடங்கிய விடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த வீடியோவில் உள்ள மற்ற இருவர் பற்றிய விசாரனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
விஜய் சேதுபதியின் காட்டான் டீசர்!

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

