புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரூ.4.41 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் 8 பேர் கைது

ஹைதராபாதில் ரூ.4.41 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :1 மே 2017, 3:50 am

DIN

ஹைதராபாத்: ஹைதராபாதில் ரூ.4.41 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோடிக்கணக்கான மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய நோட்டுகளை மாற்ற ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக, தகவல் கிடைத்ததை அடுத்து, ஹைதராபாதின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4.41 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வீட்டில் இருந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, ஹைதராபாதில் இதுவரை ரூ.9 கோடிக்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனினும், இப்போதுதான் ஒரே நேரத்தில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சித்ததாக இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.