ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது: யோகி ஆதித்யநாத் கவலை

ஊழல் குற்றச்சாட்டுகள், கடமையிலிருந்து விலகியிருத்தல் போன்ற காரணங்களால் மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

News image
Updated On :3 மே 2017, 7:40 pm

DIN

ஊழல் குற்றச்சாட்டுகள், கடமையிலிருந்து விலகியிருத்தல் போன்ற காரணங்களால் மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 238 எம்எல்ஏக்களுக்கான பயிலரங்கம், லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், பெரும்பாலான நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. சுயநலனுக்காகவும், தங்களின் குடும்ப நலனுக்காகவும் மட்டுமே சேவையாற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதுதவிர, மக்கள் பிரதிநிதிகளான சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மேலும், பலர் தங்கள் ஜனநாயகக் கடமையான மக்கள் சேவையிலிருந்து விலகியே இருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால்தான், மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த அமைப்புமே பாதிப்புக்குள்ளாகிறது.
ஜனநாயக அமைப்புகளில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஓர் அமைப்பு என்று ஒன்று இருக்குமேயானால், அவை நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் மக்களை சென்று சந்திக்க வேண்டிய நிர்பந்தம் நமக்குதான் (மக்கள் பிரதிநிதிகள்) இருக்கிறது. இந்த நிர்பந்தம் வேறெந்த அரசு அதிகாரிகளுக்கோ, நீதிபதிகளுக்கோ கிடையாது.
எனவே, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை, நம் நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என விரும்புகிறேன்.
ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை தற்போது ஓர் ஆண்டுக்கு 20-இலிருந்து 25 நாள்கள் வரைதான் கூடுகிறது. இந்த எண்ணிக்கை 90-ஆக உயர வேண்டும். அப்போதுதான், மக்கள் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் சட்டப் பேரவையில் முன்வைக்க முடியும். அவ்வாறு 90 நாள்கள் சட்டப்பேரவை கூடினால் மட்டுமே மாநிலக் காவல்துறையிலிருந்து, ஊராட்சி அமைப்புகள் வரை அனைத்து அரசு துறைகளும் சரிவர இயங்கும் என்றார் யோகி ஆதித்யநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.