மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கேரளம்: பெண் ஐஏஎஸ் அதிகாரியை கரம் பிடிக்கிறார் காங்கிரஸ் எம்எல்ஏ

கேரளத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ ஒருவர் காதல் திருமணம் செய்யவுள்ளார்.

News image
Updated On :3 மே 2017, 7:42 pm

DIN

கேரளத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ ஒருவர் காதல் திருமணம் செய்யவுள்ளார்.
அருவிக்கரை சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் அவரது பெயர் கே.எஸ். சபரிநாதன் (33). இந்நிலையில், முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், திருவனந்தபுரத்தில் துணை ஆட்சியராக இருக்கும் திவ்யாவை திருமணம் செய்யவிருக்கும் தகவலையும், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பொது மக்களின் ஆசீர்வாதம் தங்கள் இருவருக்கும் வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியிலும், தங்களது திருமணம் காதல் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை ஆட்சியர் திவ்யா கூறுகையில், 'அலுவல் ரீதியாக சபரிநாதனை முதன்முதலாக சந்தித்தேன். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது' என்றார்.
சபரிநாதனின் தந்தை ஜி.கார்த்திகேயன், கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் மறைந்த மூத்த தலைவர்களுள் ஒருவராவார். கேரள மாநில சட்டப் பேரவைத் தலைவராக அவர் பதவி வகித்துள்ளார். அவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்தான். ஜி. கார்த்திகேயனின் காதல் திருமணம், மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திருவனந்தபுரத்தில் சபரிநாதனுக்கும், திவ்யாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக அவர்களது உறவினர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.