டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முஸ்லிம்கள் சமரசத்தை ஏற்காவிட்டால் ராமர் கோயில் பிரச்னையை நீதிமன்றமே தீர்த்துவைக்கும்

அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் சமரசத்தை விரும்பாவிட்டால் அப்பிரச்னையை உச்ச நீதிமன்றமே தீர்த்து வைக்கும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

DIN

அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் சமரசத்தை விரும்பாவிட்டால் அப்பிரச்னையை உச்ச நீதிமன்றமே தீர்த்து வைக்கும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சுவாமி லக்னௌவில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது ஹிந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் சமரசத்தை விரும்பாவிட்டால் அப்பிரச்னையைத் தீர்த்து வைக்க உச்சநீதிமன்றம் உள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பிறந்த இடம் அயோத்தியே என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்து கேள்வி எழுப்பினால், அயோத்தியைத் தவிர முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் மசூதியை கட்டிக் கொள்ளட்டும். ஆனால், ராம ஜென்மபூமியில் மசூதி கட்டப்படக் கூடாது.
அயோத்தியில் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்பதை முஸ்லிம் மதகுருக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ராமர் கோயில் ஆதரவாளரான முதல்வர் யோகியுடன் சுவாமி எந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறித்து தகவல் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.