டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அகிலேஷுக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

குஜராத் மாநில மக்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:29 pm

DIN

குஜராத் மாநில மக்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பாரத் பாண்டியா, ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் சுதந்திரத்துக்கு குஜராத் மிக முக்கிய பங்களிப்பை அளித்துள்ளது. பிரிட்டீஷாரின் காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகிய தலைவர்கள், குஜராத் மாநிலத்தவர்கள்தான்.
வீரர் ஒருவர் நாட்டுக்கு மட்டுமே சொந்தமாவார். மாநிலத்துக்கு அவர் சொந்தம் கிடையாது. அவரது உயிர்த் தியாகத்தையும் மாநில ரீதியில் பார்க்கக்கூடாது என்று பாரத் பாண்டியா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், 'வீரர்கள் அனைவரும் நாட்டுக்கே சொந்தம்; மாநிலங்களுக்கு அவர்கள் சொந்தமானவர்கள் அல்ல' என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி செய்தியாளர்களிடம் பேசியபோது, வீரர்களின் உயிர்த் தியாகத்தை வைத்து அரசியல் செய்வது தவறு என்றார். மேலும் அவர் கூறுகையில், 'வீரர்கள் அனைவரும் நாட்டுக்காகவே போரிடுகின்றனர். குறிப்பிட்ட மதம், பிராந்தியம், ஜாதி அல்லது வகுப்புக்கு அவர்கள் சொந்தமானவர்கள் கிடையாது' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் கூறுகையில், 'அகிலேஷ் யாதவின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. நமது நாட்டுக்காக சண்டையிடும் நபர் யாராக இருந்தாலும், அவரை இந்தியர் என்றே அழைக்க வேண்டும். மதராஸி, குஜராத்தி என்றோ அல்லது குறிப்பிட்ட மாநிலத்தை வைத்தோ அடையாளம் காணக்கூடாது' என்றார்.
யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், 'குஜராத் மாநிலம், சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த மாநிலமாகும். 560 சிறிய பகுதிகளை ஒரே நாடாக இணைத்தவர் அவர். வீரத்துக்கு இதை விட பெரிய எடுத்துக் காட்டு வேண்டுமா?' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.