தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாற்றத்தை உருவாக்கிய தொழிலதிபர்கள்: முகேஷ் அம்பானி முதலிடம்

சர்வதேச அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய 25 தொழிலதிபர்கள் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :17 மே 2017, 7:40 pm

DIN

சர்வதேச அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய 25 தொழிலதிபர்கள் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி (60) முதலிடம் பிடித்துள்ளார்.
தங்களது தொழில் செயல்பாடுகள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழிலதிபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை இரண்டாவது ஆண்டாக தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் முகேஷ் அம்பானி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு குறைந்த செலவில் இணையத்தை பயன்படுத்த வாய்ப்பையும் அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன் மூலம் மாற்றத்தை உருவாக்கிய தொழிலதிபர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எண்ணெய், இயற்கை எரிவாயுத் துறையில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானி, அதிரடியாக தொலைத் தொடர்புத் துறைக்குள் நுழைந்து, மிகக் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையை மக்களுக்கு அளித்துள்ளார். அவரால் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் அந்தப் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.