நவீன் ஜிண்டால் மீது சிபிஐ மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல்
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜிண்டால் குழுமத் தொழிலதிபரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான


நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜிண்டால் குழுமத் தொழிலதிபரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவீன் ஜிண்டால் மீது சிபிஐ மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலம், அமர்கொண்டா நிலக்கரி சுரங்கம் ஜிண்டால் ஸ்டீல் குழுமத்துக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜிண்டால் குழுமத் தலைவர் நவீன் ஜிண்டால் உள்பட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் நவீன் ஜிண்டால் மற்றும் 5 பேர் மீது சிபிஐ மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...