கங்ரா (ஹிமாச்சல் பிரதேசம்): காங்கிரஸ் ஒரு நகைச்சுவை சங்கம் போல் ஆகி விட்டது என்று ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சார பேரணியில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
தற்பொழுது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ஹிமாச்சல் பிரதேசதுக்கு வரும் நவம்பர் 9-ஆம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அவர் கங்ரா என்னும் இடத்தில் தனது முதல் பேரணியில் பங்கேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது:
நாம் எல்லாரும் காங்கிரஸ் கட்சியினை இப்பொழுது கவனிக்க வேண்டும். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு எதுவுமே மிச்சம் இல்லை; நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அவர்களது பிடியானது தளர்ந்து வருகிறது.
மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது மாற்றத்துக்குத்தான் வாக்களிக்கின்றனர். காங்கிரஸ் தற்பொழுது ஒரு நகைச்சுவை சங்கம் போல் ஆகி விட்டது.
ஹிமாச்சல் பிரதேச முதல்வர் வீரபத்திர சிங் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி தொடர்ந்து பேசுகிறார். ஆனால் அவரே ஊழல் வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்றுத்தான் தற்பொழுது வெளியே இருக்கிறார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இன்றி நடந்து கொள்வோம் என்று அவர் பேசுகிறார். ஆனால் அவர் பேச்சினை யாராவது நம்புவார்களா?
இவ்வாறு மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!
புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


