ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கேரளாவைச் சேர்ந்த மேலும் 6 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்

கேரளாவைச் சேர்ந்த மேலும் 6 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் வியாழக்கிழமை இணைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:45 pm

கேரள மாநிலத்தின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த இந்த 6 பேரும் கேரளாவில் செயல்பட்டு வரும் பி.எஃப்.ஐ (PFI) என்ற அமைப்பில் இருந்தவர்கள் ஆவர். 

முன்னதாக, அக்டோபர் 26-ந் தேதி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து சிரியாவுக்கு செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதுபோல கடந்த ஜூலை மாதம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கண்ணூர் பகுதி இளைஞர் ஷாஜஹான் வெல்லுவா கண்டி என்பவன் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.