புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பலாத்காரத்தினை எதிர்த்த பெண்ணை உயிரோடு கொளுத்திய கணவரின் சகோதரர்!

தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதை எதிர்த்த இளம்பெண்ணை கணவரின் சகோதரரே உயிரோடு கொளுத்திய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:20 am

பதுன் (உ.பி): தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதை எதிர்த்த இளம்பெண்ணை கணவரின் சகோதரரே உயிரோடு கொளுத்திய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் பதுன் மாவட்டத்தில் உள்ளது லபரி என்னும் கிராமம். இங்குதான் நேற்று இரவு அந்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசித்து வரும் நீலம் (27) என்ற பெண் கணவரை இழந்தவர். இவரது கணவரின் சகோதரர் ஜிதேந்திரா. இவர் நேற்றிரவு தனியாக இருந்த நீலத்தினை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீலம் அவரை எதிர்த்துப் போராடினார். இதனால் ஜிதேந்திரா ஆத்திரமடைந்து நீலத்தின் மீது உயிருடன் நெருப்பு பற்ற வைத்தார். இதில் நீலம் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அவரது தகப்பனார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிதேந்திராவைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.