குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்: 2-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 2-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.


குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 2-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்தது.
குஜராத்தில் உள்ள அனைத்து 182 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவிக்காது என்றாலும், மேலும் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று குஜராத் மாநில ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ஹர்ஷில் நாயக் ஆமதாபாதில் வியாழக்கிழமை தெரிவித்தார். முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த பாபுநகர் வேட்பாளர் அனில் வர்மா மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுப் புகார்கள் வந்ததை அடுத்து அத்தொகுதியில் அம்ஜத் பதான் என்பவர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலில் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடம் பெற்றுள்ளனர்.
குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...