எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாஜக விளம்பரத்தில் குழந்தையில் இருந்து இளவரசரான ராகுல்: தேர்தல் ஆணையம் அனுமதி

குஜராத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட விளம்பரத்தில் ராகுலை யுவராஜ் என்று குறிப்பிடுவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:26 pm

DIN


அகமதாபாத்: குஜராத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட விளம்பரத்தில் ராகுலை யுவராஜ் என்று குறிப்பிடுவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

டிஜிட்டல் விளம்பரங்களில் ராகுலை கிண்டல் செய்யும் வகையில் பப்பு (குழந்தை) என்ற வார்த்தையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடும் முன், குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான ஊடகங்கள் குழுவிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டியது அவசியம்.

அந்த வகையில் பப்பு என்று வார்த்தையைக் கொண்ட பாஜகவின் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்ததோடு, அந்த வார்த்தைக்கு பதில் வேறொரு வார்த்தையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.

இதையடுத்து, பாஜகவின் விளம்பரத்தில் பப்பு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அதற்கு பதில் யுவராஜ் (இளவரசர்) என்ற வார்த்தையைப்போட்டு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது பாஜக.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.