லக்னௌ: எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் எஞ்சினானது, இன்று அதிகாலை மூன்று மணி நேரத்தில் மூன்று முறை ரயில் பெட்டிகளைப் பிரிந்து தனியாகச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காஷ்மீரின் ஜம்முவில் இருந்து பிஹாரின் தலைநகர் பாட்னா வரை செல்வது அர்ச்சனா எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயிலானது நேற்று ஜம்முவின் தவி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மாவட்டத்தின் வழியாக அந்த எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தது.
அதிகாலை 02.30 மணி அளவில் சர்சவா நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த பொழுது ரயிலின் எஞ்சினானது பிற பெட்டிகளிலிருந்து பிரிந்து தனியாகச் செல்லத் துவங்கியது. உடனடியாக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு எஞ்சினை ரயில் பெட்டிகளுடன் பொருத்தினர். பின்னர் 03.17 மணி அளவில் பயணம் தொடர்ந்தது.
ஆனால் அதிகாலை 04.25 மணி அளவில் ரயிலானது பிலக்ஹனி ரயில் நிலையம் அருகே வந்த பொழுது மீண்டும் எஞ்சினானது பிற பெட்டிகளிலிருந்து விடுபட்டது. மறுபடியும் ஊழியர்கள் எஞ்சினை ரயில் பெட்டிகளுடன் பொருத்தினர். 05.10 மணி அளவில் ரயில் புறப்பட்டது.
மறுபடியும் மூன்றாவது முறையாக 05.35 மணி அளவில் எஞ்சினானது பிற பெட்டிகளிலிருந்து விடுபட்டது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக மண்டல முதுநிலை ரயில்வே அதிகாரிகளுடன் பேசி, புதிய எஞ்சின் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
பின்னர் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!
புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


