தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் 'தீபாவளி ஸ்பெஷல்' என்ன தெரியுமா?

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் வாரத்தில் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ தீபாவளி தன் தனா தன்' என்ற சிறப்புச் சலுகை திட்டத்தினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Published On :29 ஜனவரி 2024, 11:22 pm IST

மும்பை: தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் வாரத்தில் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ தீபாவளி தன் தனா தன்' என்ற சிறப்புச் சலுகை திட்டத்தினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 18-ஆம் தேதியன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அதனை முன்னிட்டு வாடிகையாளர்களுக்கு சிறப்புச் சலுகை திட்டத்தினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 'ஜியோ தீபாவளி தன் தனா தன்'  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா அழைப்புகள் மற்றும் டேட்டாவினை வழங்கும் ரூ.399 திட்டத்தின் கீழ், இன்று துவங்கி வரும் 18-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, முழுமையாக பணம் திரும்பப் பெறும்படியான 'கேஷ் பேக்' அளிக்கப்பட உள்ளது.

இந்த 'கேஷ் பேக்' திட்டமானது ரூ.400 என்ற அளவில் இருக்கும். அதுவும் ரூ.50 மதிப்புள்ள எட்டு கூப்பன்களாக வழங்கப்படும். அதனை அவர்கள் எதிர்காலத்தில் ரூ.309-.க்கு மேலான திட்ட ரீசார்ஜுகளிலும், ரூ.91-க்கு மேலான 'டேட்டா ரீசார்ஜுகளிலும்' பயன்படுத்திக் கொள்ளலாம். அனால் ஒரு நேரத்தில் ஒரு கூப்பனைத்தான் பயன்படுத்த முடியும்.           

அநேகமாக அக்டோபர் 19-ஆம் தேதியன்று கட்டண விகிதங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்ப்படுமென்றும், ஆனால் மேலே குறிப்பிட்ட இந்த ஒரு வார காலத்தில் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு சலுகைகளில் எதுவும் மாற்றமிருக்காது எனவும் நிறுவன வட்டங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.