'தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த கறை': பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைப் பேச்சு!   

தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை  என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது கடும் சர்ச்சையை உணடாகியுள்ளது.
'தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த கறை': பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைப் பேச்சு!   
Updated on
1 min read

நொய்டா: தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை  என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது கடும் சர்ச்சையை உணடாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரே உலக அதிசயமான தாஜ் மஹாலை, சமீபத்தில் மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டது. அந்த சம்பவம் உண்டாக்கிய சர்ச்சை அடங்கும் முன்னர், தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை  என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது கடும் சர்ச்சையை உணடாகியுள்ளது. அத்துடன் அவர் வரலாற்றினையும் தவறாக கூறி இருப்பது மேலும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. 

அம்மாநிலத்தின் சர்தானா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் சங்கீத் சோம். இவர் சமீபத்தில் மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடியோ தற்பொழுது இணைய தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த விடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ் மஹாலை நீக்கி மாநில அரசு உத்தரவிட்டது பற்றி பெரும்பாலானோர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எந்த வரலாற்றினை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்? யாருடைய வரலாறு இது?

தாஜ் மஹாலை கட்டியவர் தன்னுடைய தந்தையை சிறையில் அடைத்தவர். ஹிந்துக்களை அவர் இந்தியாவிலிருந்து ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க நினைத்தவர். இத்தகையவர்கள் எல்லாம் நமது வரலாற்றின் ஒரு பகுதியாவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மொத்தத்தில் தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை.

வரலாற்றினை நாம் மாற்றி எழுதுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த விடியோவில் பேசியுள்ளார். ஆனால் அவர் கூறியுள்ளது போல தாஜ் மஹாலை கட்டிய ஷாஜஹான் தனது தநதையை சிறையில் அடைக்கவில்லை என்பதும், அவரது மகனான அவுரங்கசீப்தான் தன்னுடைய தந்தையான ஷாஜஹானை சிறையில் அடைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com