சர்ச்சைகளால் உண்டான சூட்டைத் தணிக்க தாஜ்மஹலுக்கு போகும் உத்தரபிரதேச முதல்வர்! 

தொடர் சர்ச்சைகளால் எழுந்துள்ள சூழலை சரிசெய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26-ஆம் தேதி தாஜ்மஹலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சைகளால் உண்டான சூட்டைத் தணிக்க தாஜ்மஹலுக்கு போகும் உத்தரபிரதேச முதல்வர்! 

லக்னௌ: தொடர் சர்ச்சைகளால் எழுந்துள்ள சூழலை சரிசெய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26-ஆம் தேதி தாஜ்மஹலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்ததை ஒட்டி மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தாஜ்மஹல் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. அத்துடன் மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்தும் தாஜ்மஹலை நீக்கி மாநில அரசு உத்தரவிட்ட விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் சமீபத்தில்  மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநிலத்தின் சர்தானா தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ சங்கீத் சோம், 'தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை' என்று  பேசியது மீண்டும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இத்தகைய காரணங்களால் பாஜக அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. அத்தத்துடன் சமூக வலைத்தளங்களிலும் கண்டங்கள் குவிகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக கருத்து  தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

தாஜ்மஹல் யாரால் கட்டப்பட்டது, யாருக்காக கட்டப்பட்டது என்பது முக்கியம் அல்ல. அது இந்திய தொழிலாளர்களின் ரத்ததாலும் வியர்வையாலும் கட்டப்பட்டது. காதலின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹல் சுற்றுலாத்துறை கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள் உண்டாக்கிக் தருவதும், பாதுகாப்பினை உறுதி செய்வதும் நமது முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் தொடர் சர்ச்சைகளால் எழுந்துள்ள சூழலை சரிசெய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வரும் 26-ஆம் தேதி தாஜ்மஹல், ஆக்ரா கோட்டை மற்றும் பதேபூர் சிக்ரி உள்ளிட்ட நினைவிடங்களுக்கு செல்ல உள்ளார் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com