இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காவலர் நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 7:53 pm

DIN

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியா-திபெத் இடையேயான 2,500 மைல் தொலைவை, கடந்த 1959-ஆம் ஆண்டு வரை இந்திய காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி சீனப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உயிர்த்தியாகம் செய்யும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்ûயும் பாதுகாப்பதற்காக, இதுவரை 34,408 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016-17-ஆம் ஆண்டில் மட்டும் 383 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தில்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் காவலர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.