குஜராத் தேர்தல் பீதியில் காங்கிரஸ்: விஜய் ரூபானி
குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலைக் கண்டு, காங்கிரஸ் கட்சி பீதியில் உள்ளது என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறினார்.


குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலைக் கண்டு, காங்கிரஸ் கட்சி பீதியில் உள்ளது என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறினார்.
இதுதொடர்பாக, காந்தி நகரில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்று நம்புகிறோம். அப்படியே நடக்கும். ஆனால், விரக்தியின் காரணமாக, தேர்தலைக் கண்டு காங்கிரஸ் கட்சி பீதியில் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் பீதியில் இருக்கிறார்.
தேர்தல் தேதியை அறிவிக்காததை காரணம் காட்டி, தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பது, ஜனநாயகத்தில் சரியான போக்கு அல்ல என்று அவர் கூறினார்.
விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை. அந்த மாநிலத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளையும், அறிவிப்புகளையும் பிரதமர் மோடி வெளியிடுவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவிப்பை தாமதம் செய்கிறது என்று ப.சிதம்பரம் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், விஜய் ரூபானி மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...