தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மோடியை 'மிமிக்ரி' செய்யக் கூடாது: பிரபல தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் எச்சரிக்கப்பட்ட போட்டியாளர்!

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர், பிரதமர் மோடியை 'மிமிக்ரி' செய்யக் கூடாது என்று எச்சரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2017, 10:26 am

புதுதில்லி: பிரபல ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர், பிரதமர் மோடியை 'மிமிக்ரி' செய்யக் கூடாது என்று எச்சரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஷ்யாம் ரங்கீலா. இவர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியான ஸ்டார் ப்ளஸில் நடைபெற்று வரும் 'தி கிரேட் இந்தியன் லாஃபர் சேலஞ்' நிகழ்ச்சியில் போட்டியாளாராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பாலிவூட் நடிகர் அக்ஷய் குமார் சிறப்பு நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி அவர் கூறியதாவது:

என்னுடைய மிமிக்ரி திறமையின் காரணமாக நான் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பினை பெற்றேன்.ஆனால அங்கு என்னுடைய முதல் நிகழ்ச்சியின் பொழுது மோடி மற்றும் ராகுல் இருவரையும் போல பேசி மிமிக்ரி செய்திருந்தேன்.

Story image

ஆனால் வேறு ஏதாவது செய்து காட்டுமாறு நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.பின்னர் நான் மோடி குறித்து மிமிக்ரி எதுவும் செய்யக் கூடாது என்றும், வேண்டுமானால் ராகுல் காந்தி பற்றி மிமிக்ரி செய்யலாம் என்றும் கூறப்பட்டது. நான் வேறு ஒரு நிகழ்ச்சிக்கான ஸ்க்ரிப்ட்டை உருவாக்கி கொண்டிருந்த பொழுது, மீண்டும் ஒரு முறை ராகுல் பற்றியும் மிமிக்ரி செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன்.

இறுதியில் நான் உருவாக்கிய ஸ்க்ரிப்ட்டினை, இரண்டு நாட்கள் மட்டுமே செய்த ஒத்திகையோடு, எனது சொந்த குரலில் பேசினேன். ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு; ஆனால் இறுதியில் அது பெரிய கொடுங்கனவாக மாறி விட்டது.

இவ்வாறு ஷ்யாம் தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சியின் முன்னாள் நடுவராக இருந்த மல்லிகா துவா, அங்கு ஒளிப்பதிவுக் கூடத்தில் அவருக்கும் அக்ஷய் குமாருக்கும் இடையே நடைபெற்ற  உரையாடல் ஒன்றின் வீடியோவினை மல்லிகா வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.    

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.