திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சத்தீஸ்கர்: 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; துப்பாக்கிகள் பறிமுதல் 

சத்தீஸ்கரில் நக்சலைட்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக்

News image
Updated On :26 அக்டோபர் 2017, 1:34 am

ANI

ராஜ்நந்தகாவுன்:  சத்தீஸ்கரில் நக்சலைட்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவுன் மாவட்டத்தில் உள்ள மன்பூர் பிஎஸ் காட்காங்கின் கோபென்கட்கா பகுதியில் உள்ள காடுகளில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அம்மாவட்ட போலீசாரும், இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் 44 பட்டாலியன் போலீஸாரும் நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதற்கு போலீசாரும் பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டனர். 

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் அந்த பகுதியைச் சேர்ந்த நக்சலைட் குழு உறுப்பினர் மகேஷ், பாலேமடி உள்ளூர் அமைப்பு அணியைச் சேர்ந்த தளபதி ராகேஷ் மற்றும் லாஸ் துணைத் தளபதி ரஞ்சித் உள்ளிட்ட மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். 

அவர்கள் வைத்திருந்த ஏ.கே., இன்சாஸ் மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் இதுவரை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.