கொல்கத்தா: தன் மனைவியின் கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்த உடன், அவளை அடித்தே கொன்ற கணவனை காவல்துறை கைது செய்துள்ளது.
மனதினை பதறச் செய்யும் இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.அங்குள்ள இலம்பசர் பகுதியில் நேற்றிரவு, குறிப்பிட்ட அந்த கர்ப்பிணி பெண்ணை அவரது கணவன், அவரது தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் அடித்து துன்புறுத்தி, கொடுமை செய்து கொன்றுள்ளனர்.
உள்ளூர் பகுதி மக்களின் கூற்றுப்படி கர்ப்பமாக உள்ள அந்தப் பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தினைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று வெளியான அந்த சோதனையின் முடிவில், அந்த பெண்ணின் கருவிலிருப்பது பெண் குழந்தையென்று கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணவன், அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் இணைந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை தொடர்ந்து தாக்கி, துன்புறுத்தி கொடுமை செய்து கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் கணவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தினைக் கண்டறியும் சோதனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், இத்தகைய செயல்கள் சட்ட விரோதமாக நடந்து வருவது வருத்தமளிக்கும் ஒன்றாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


