தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு! 

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப் படி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2017, 12:41 pm

DIN

சென்னை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப் படி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கில் எதிர் மனுதாரரான தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்யலாம் என்று பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையினை ஏற்று இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய ஏதுவாக சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.