மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அலுவலக உதவியாளர்: தில்லி தனியார் பள்ளியில் பயங்கரம்!

தலைநகர் தில்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுமியை, அலுவலக உதவியாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2017, 1:05 pm

DIN

தில்லி: தலைநகர் தில்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுமியை, அலுவலக உதவியாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தில்லியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வந்த 5 வயது சிறுமியை அங்கு அலுவலக உதவியாளராக வேலை செய்யும் விகாஸ் (40) என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். பெற்றோரின் புகாரினைத் தொடர்ந்து குற்றவாளி விகாஸ் தற்பொழுது கைது செய்ப்பட்டுள்ளான்.

முன்னதாக விகாஸ்  குறிப்பிட்ட அந்த பள்ளியில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளான். முதலில் அங்கு அவன் காவலராக பணியாற்றி உள்ளான். சம்பவத்தன்று பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு திரும்பிய குழந்தையை விகாஸ் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்

பின்னர் இதை பற்றி வெளியே கூறக்  கூடாது என்று விகாஸ் குழந்தையை பின்னர் மிரட்டியும் உள்ளான். ஆனால் மாலை சிறுமி வீட்டிற்கு திரும்பியதும், அவளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பின்னர் பெற்றோருக்கு விஷயம் தெரிந்துள்ளது.

உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசில் புகார் செய்த பின்னர், விகாஸ் கைது செய்யப்பட்டன்.

நேற்று முன்தினம் குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் உள்ள கழிவறை ஒன்றுக்குள் 2-ம் வகுப்பு மாணவன் கழுத்தறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இந்நிலையில் தற்பொழுது இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.