மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் மனைவி மெஹஜபின் ஷைக், மும்பையில் வசிக்கும் தனது தந்தையை கடந்த ஆண்டு சந்தித்து திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.
1993-ஆம் ஆண்டில் மும்பையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். அவரும் ,அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அவர்களது நண்பன் சோட்டா ஷகீல் ஆகிய மூவரும் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிமின் சகோதரரான காஸ்கர் ஆள்கடத்தல் வழக்கு ஒன்றில் இவ்வார துவக்கத்தில் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வரும் விசாரணையில்தான் அவர் மேற்கூறிய தகவல்களை தெரிவித்துள்ளார்
நேற்றைய விசாரணையின் பொழுது அவரது மூத்த அண்ணன் தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அவர்களது நண்பன் சோட்டா ஷகீல் ஆகிய மூவரும் பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக காஸ்கர் தெரிவித்தார்.
அத்துடன் அது தொடர்பாக நான்கு முகவரிகளையும் கொடுத்தார். அதேபோல இன்றும் தொடர்ந்த விசாரணையில் தாவூத் இப்ராஹிமின் மனைவி மெஹஜபின் ஷைக், மும்பையில் வசிக்கும் அவரது தந்தை சலீம் காஷ்மீரியினை, கடந்த ஆண்டு மத்தியில் வந்து சந்தித்தார் என்று கூறியுள்ளார்.
சந்திப்புக்குப் பிறகு அவர் இந்தியாவிலிருந்து அமைதியாக வெளியேறி விட்டார் என்பதையும் காஸ்கர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


