மும்பை: பத்திரிக்கையாளராகவும், இலக்கியம் மற்றும் பிரபல எழுத்தாளராகவும் திகழ்ந்த அருண் சாது (76) இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மும்பையில் காலமானார்.
கடந்த 1942-ஆம் ஆண்டில் பிறந்த அருண் சாது பல்வேறு ஆங்கில பத்திரிக்கைகளில் பணியாற்றியவர். புனே பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராகவும் திறம்பட செயல்பட்டவர். ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை சாது எழுதியுள்ளார்.
குறிப்பாக சிவசேனா கட்சியின் எழுச்சி, சீன புரட்சி, வியட்நாம் போர் போன்ற புத்தகங்கள் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. சாகித்திய அகாடமி விருது மற்றும் பாரதிய பாஷா பரிஷாத், என்.கே.கேல்கர் மற்றும் ஆச்சார்யா அட்ரே போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாசிரியராகவும் அருண் சாது தனது திறமையை வெளிக்காட்டியவர்.
இந்நிலையில், இதயநோய் காரணமாக நேற்று காலை 10.30 மணியளவில் மும்பையில் உள்ள சாய் சியோன் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்!

நியூசிலாந்து அமைச்சருடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பியூஷ் கோயல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


