

சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர். கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. ஜெயலலிதாவை பார்த்தேனா, இல்லையா என்பதை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைச்சர்கள் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. அனைவரும் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகிறோம். கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக வரும் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.