சுடச்சுட

    

    ’தவறான விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை'

    By DIN  |   Published on : 22nd March 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அளித்த பதில்:
    ஊடகங்களில் தவறான விளம்பரங்கள் வெளியாவதை ஒப்புக் கொள்கிறேன். அத்தகைய விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கெனவே உள்ள சில சட்டங்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளன.
    எனினும், அத்தகைய விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    தங்கத்தில் ஹால்மார்க் எனப்படும் தர முத்திரையும், தங்கத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டியது இனி கட்டாயமாக்கப்படும் என்று பாஸ்வான் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai