பட்டாசு வெடிக்க காலக்கெடு விதித்து பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றங்கள் உத்தரவு

தீபாவளித் திருநாளன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக காலக்கெடு விதித்து பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றங்கள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பட்டாசு வெடிக்க காலக்கெடு விதித்து பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றங்கள் உத்தரவு

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் அனைவரும் வண்ணமையமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வர்.

காற்று மாசுபடுவதாகக் கூறி தில்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு விற்பனையில் சில நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இது நவம்பர் 1-ந் தேதி முதல் அமலில் இருக்கும்.

இந்நிலையில், பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டீகர் மாநிலங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தீபாவளியன்று காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இந்த நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படுவது தொடர்பாக காவல்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும், உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com